இலங்கை முழுமையாக இருளில் இருந்து வெளியேறவில்லை – அலி சப்ரி

இலங்கை முழுமையாக இருளில் இருந்து வெளியேறவில்லை என்றாலும், நம்பிக்கை அளிக்ககூடிய அறிகுறிகள் காணப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நம்பிக்கையின் ஒளிக்கீறுகள் காணப்படுகின்றன ஆனால் நாங்கள் இன்னமும் நெருக்கடியிலிருந்து மீளவில்லை.

அமெரிக்க டொலரின் ஸ்திரத்தன்மை, சுற்றுலாப் பயணிகளின் அதிகரிப்பு மற்றும் பணவீக்கம் உள்ளிட்ட பல காரணிகள் இந்தநம்பிக்கைக்கு பங்களிக்கின்றன. 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது பணவீக்கம் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

நாட்டில் உணவு காணப்படுகின்றது தட்டுபாடுகளும் நீண்டவரிசைகளும் இல்லாமல் செய்யப்பட்டுள்ளன. சில சிறிய விதிவிலக்குகள் இருந்தபோதிலும், ஐ.எம்.எப். இன் ஒப்புதலுக்கு முன்னர் எடுக்கப்பட வேண்டிய பல தேவையான நடவடிக்கைகள் மற்றும் முன்நிபந்தனைகள் தொடர்பாக முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவிக்கான அங்கீகாரத்தை பெறுவதற்காக மேற்கொள்ளவேண்டியப ல நடவடிக்கைளை நாங்கள் முன்னெடுத்துள்ளோம்,மேலும் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கை அனைவருக்கும் சமமானதாக காணப்படவேண்டும்.

2030 ஆம் ஆண்டளவில் நாட்டிற்குள் நிலையான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரத்தை நிறுவுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது, இலங்கை ஒரு தீவாக இருப்பதால் காற்றாலை மற்றும் சூரிய சக்தி ஆகிய இரண்டிற்கும் சிறந்த இடங்கள் காணப்படுகின்றன.

மேலும் இலங்கையை இராணுவ மையமாகவோ அல்லது துறைமுகமாகவோ பயன்படுத்த எவருக்கும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம், இதுவே எமது தெளிவான முடிவு. சீனாவின் சமீபத்திய முதலீடு முற்றிலும் வணிக ரீதியிலானது.” என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.