ரணில் வீட்டுக்கு தீவைத்த விவகாரம் ஸ்ரீ ரங்காவிற்கு நீதிமன்றால் பிணை!
ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவின் வீட்டுக்குத் தீவைத்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே ஸ்ரீ ரங்காவிற்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
கொழும்பு கோட்டை நீதிவான் முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்டவேளை நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. ஸ்ரீரங்கா கடந்த வருடம் ஜூலை மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதியின் வீட்டிற்கு வெளியே இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார். சட்டவிரோதமாக ஒன்று கூடியவர்களின் உறுப்பினரான இவர் வீட்டிற்கு சேதம் ஏற்படுத்தும் நடவடிக்கைகளிற்கு உதவினார் என சிஐடியினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
ஸ்ரீ Pரங்கா சொத்திற்கு சேதம் ஏற்படுத்தும் தீயநோக்கத்துடன் அத்துமீறி உள்ளே நுழைந்தார் என குற்றம்சாட்டப்படலாம் எனவும் சிஐடியினர் தெரிவித்திருந்தனர்.
எனினும் ஸ்ரீரங்கா சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் அவர் ஓர் ஊடகவியலாளராகவே அந்த இடத்தில் காணப்பட்டார் எனத் தெரிவித்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை