தினேஸ் சாப்டரின் குடும்ப உறவினர்கள் -பிரையன் தோமசின் மடிக்கணிணியை ஆராய நீதிமன்றம் அனுமதி
மர்மமான முறையில் உயிரிழந்த பிரபல வர்த்தகர் தினேஸ் சாப்டரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வர்ணணையாளர் பிரையன்தோமஸ் ஆகியோர் பயன்படுத்திய மடிக்கணிணிகளை ஆராய்வதற்கு சிஐடியினருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அரசபகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு மடிக்கணிணிகளை சமர்ப்பித்து உரிய அறிக்கையை பெறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தினேஸ்சாப்டரின் குடும்ப உறுப்பினர்களும் பிரையன் தோமசும் பயன்படுத்திய மடிக்கணிணிகளை ஆராய்வதற்கான அனுமதியை சிஐடியினர் நீதிமன்றத்திடம் கோரியிருந்தனர்.
இதனடிப்படையில் கொழும்பு நீதவான் பிரசன்ன டி அல்விஸ் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளார்.
தினேஸ்சாப்டர் கடந்த வருடம் டிசம்பர் 15 ம் திகதி மர்மமானமுறையில் உயிரிழந்தார்.
கருத்துக்களேதுமில்லை