திருக்கோவில் கல்விவலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

நூருல் ஹூதா உமர்

மாணவர்களின் கல்விக்கு வறுமை தடையாக அமையக்கூடாது என்ற நோக்கில் இணைந்த கரங்கள் அமைப்பால் நாடு தழுவிய ரீதியாக பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், புத்தகப்பை என்பன வழங்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக அம்பாறை மாவட்ட திருக்கோவில் கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் அதிகஷ்ட மற்றும் தொழில் வாய்ப்பற்ற குறைந்த வருமானத்தில் வாழும் குடும்ப மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

கமுஃதிகோஃஊறணி சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 60 மாணவர்களுக்கும், பொத்துவில் கமுஃதிகோஃஇன்ஸ்பெக்டர் ஏத்தம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 50 மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள், புத்தகப்பை என்பன இணைந்த கரங்கள் அமைப்பின் இணைப்பாளர்களான லோ.கஜரூபன், எஸ்.காந்தன், சி.துலக்சன்,மா.ஜெயநாதன், தி.சதிஸ்குமார். ஆகியோர் கலந்துகொண்டு வழங்கி வைத்தனர்.

இந்த நிகழ்வில் கமுஃதிகோஃஇன்ஸ்பெக்டர் ஏத்தம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் க. சந்திரகாசன் மற்றும் ஆசிரியர் க. கருணாகரன், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.