கல்முனை பஹ்ரியாவின் பவளவிழா விளையாட்டுப் பெருவிழா ஆரம்பம்!

நூருல் ஹூதா உமர்

கல்முனை கல்வி வலய மூத்த பாடசாலைகளில் ஒன்றான கமுஃகமுஃஅல்-பஹ்ரியா மகா வித்தியாலயத்தின் 75 ஆவது ஆண்டு பவளவிழாவை முன்னிட்டு பாடசாலை சமூகத்தால் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட விளையாட்டுப் பெருவிழா நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை மாலை மிக விமரிசையாகப் பாடசாலை அதிபர் எம்.எஸ்.பைசால் தலைமையில் பாடசாலை மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், பாடசாலை பழைய மாணவருமான கலாநிதி எம்.சி.அலிவூட்டோ கலந்துகொண்டதுடன் கௌரவ அதிதியாக சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலக உதவிக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.றியால் கலந்துகொண்டார்.

பாடசாலையின் பிரதி அதிபர்களான எம்.ஏ.அஸ்தர், எம்.ஏ சலாம், உதவி அதிபர் ஐ.றினோஸ், ஆசிரியர் ஏ.எல் பஸ்மின், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு செயலாளர் எஸ்.எல் ஹமீட், பழைய மாணவர் சங்க செயலாளர் எம்.ஐ.எம் ஜிப்ரி உட்பட பலரும் கலந்துகொண்டனர். பாடசாலையின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இவ்வருடம் முழுவதுமாக இரத்த தான முகாம்கள், பழைய மாணவர்களின் அணிகள் பங்குகொள்ளும் கிரிக்கட் சுற்றுப்போட்டி, உதைப்பந்தாட்டம், கரபந்தாட்டம், கலை, கலாசார நிகழ்வுகள், சாதனையாளர்கள் கௌரவிப்பும் பரிசளிப்பு வைபவங்கள், மேலங்கி அறிமுகம், பெண் பழைய மாணவிகளின் நிகழ்வுகள் என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.