கொக்கிளாய் மாணவர்களுக்கு கற்றல் கருவிகள் வழங்கிவைப்பு!

விஜயரத்தினம் சரவணன்

முல்லைத்தீவு – கொக்கிளாய் அ.த.க.பாடசாலை மாணவர்களுக்கு கடந்த சனிக்கிழமை கற்றல் கருவிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீP சீரடி சாயிபாபா ஆலயம் – தூண் சுவிஸ்லாந்து நிர்வாகத்தினராலேயே இவ்வாறு கற்றல் கருவிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

இந் நிகழ்வு கொக்கிளாய் அ.த.க. பாடசாலையின் முதல்வர் கணேசலிங்கம் தனேஸ்வரன் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.

அந்தவகையில் நிகழ்வில் விருந்தினர்களது உரைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, 94 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் கருவிகள் வழங்கிவைக்கப்பட்டன.

புலம்பெயர்ந்து சுவிற்ஸர்லாந்து நாட்டில் வசிக்கும் கேதீஸ்வரன் ரோகினி தம்பதியரின் புதல்வி சைந்தவியினுடைய 24ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, ஸ்ரீசீரடி சாயிபாபா ஆலயம் – தூண் சுவிற்ஸர்லாந்து நிர்வாகத்தினர் குறித்த கற்றல் கருவிகளை பாடசாலை மாணவர்களுக்கு வழங்கிவைத்தனர். தொடர்ந்து பாடசாலை மாணவர்களுக்கு மதியபோசனமும் வழங்கப்பட்டது.

மேலும் இந் நிழ்வில் விருந்தினர்களாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், கவிஞர் புரட்சி, சமூக ஆர்வலர் சிவஸ்ரீ க.நவரத்தினம், தமிழரசுக்கட்சியின் கரிக்கட்டுமூலை தெற்கு வட்டாரக் கிளையின் செயலாளர் கந்தசாமி ஜெயராஜ் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.