கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தால் தன்சல் வழங்கல்
வெசாக்கை முன்னிட்டு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தன்சல் நிகழ்வு இன்று (திங்கட்கிழi) திருகோணமலை உட்துறைமுக வீதியில் அமைந்துள்ள மாகாண சமூக சேவைகள் திணைக்கத்துக்கு முன்னால் இடம்பெற்றது.
மாகாணப் பணிப்பாளர் ஏ.ஜி.தெய்வேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்த தன்சஸ் நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு வழங்கி ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில், சமூக சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு தன்சல் உணவுகளை வழங்கி வைத்தனர்.
கருத்துக்களேதுமில்லை