தீம்புனல் மின்னிதழ் பத்திரிகையின் 2ஆம் ஆண்டும் விருது வழங்கலும்
தீம்புனல் மின்னிதழ் பத்திரிகையின் 2 ஆவது ஆண்டும் நிறைவும், விருது வழங்கல் விழாவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். பருத்தித்துறை சூரிய மஹால் மண்டபத்தில் இடம்பெற்றது.
தீம்புனல் பிரதம ஆசிரியர் சூரன் ஏ.ரவிவர்மா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு யாழ். பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபாதி பேராசிரியர் சி.ரகுராம் பிரதம விருந்தினராகவும், மூத்த ஊடகவியலாளர்களான வீ.தனபாலசிங்கம், சிரேஷ்ட ஊடகவியலாளர் இ.பாரதி ஆகியோர் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.
யாழ். பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள்துறை தலைவர் திருமதி பூங்குழலி சிறிசங்கீர்த்தனன், யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை தலைவர் திருமதி கோசலை மதன், விரிவுரையாளரும் பத்திரிகையாளருமான அ.நிக்ஸன் உள்ளிட்ட பல கலைஞர்களும், எழுத்தாளர்களும், சிரேஷ்ட ஊடகவியலாளர்களும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் பாரம்பரிய கலை, கலாசார மற்றும் புகைப்படக் கலைஞர்கள், மூத்த மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் ஆகியோர் இவ்விழாவின் அதிதிகளால் பாராட்டப்பட்டு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்படனர்.
கருத்துக்களேதுமில்லை