பதவியில் இருந்து விலகுமாறு அறிவுறுத்தல்கள் வரவில்லை! வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தெரிவிப்பு

என்னைப் பதவியில் இருந்து விலகுமாறு எந்த அறிவுறுத்தல்களும் ஜனாதிபதி தரப்பில் இருந்து எனக்கு  விடுக்கப்படவில்லை என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.

வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட சில மாகாண ஆளுநர்களை மேற்படி பதவியில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி செயலகத்தில் இருந்து அறிவுறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்தநிலையில், குறித்த விடயத்தின் உண்மைத்தன்மை தொடர்பில், கருத்து தெரிவித்த போதே வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இந்த விடயத்தைத் தெரிவித்தார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.