போதை மற்றும் சமூகச் சீர்கேடுகளிலிருந்து இளைஞர் யுவதிகளை பாதுகாக்க திட்டம்! வலி.வடக்கு பிரதேச செயலகத்தில் ஆரம்பிப்பு

யாழ்ப்பாணம் வலி.வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் போதை மற்றும் சமூகசீர்கேட்டிலிருந்து இளைஞர், யுவதிகளைப் பாதுகாக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய சைவத் திருக்கோவில்கள் ஒன்றியத்தின் நிதிப்பங்களிப்புடன், சர்வோதயம் அமைப்பின் அனுசரணையுடன் பிரதேச செயலகத்துடன் இணைத்து இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடல் திங்கட்கிழமை காலை 10 மணியளவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

உதவி பிரதேச செயலாளர் சங்கீதா கோகுலதர்சன் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பிரித்தானிய சைவத் திருக்கோவில்கள் ஒன்றியத்தின் தலைவரும், லண்டன் வோள்தம்ஸ்ரோம் கற்பகவினாயகர் ஆலய அறங்காவலர் கோபாலகிருஷ்ணன், கிராம சேவையாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அரச உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, போதை மற்றும் சமூக சீர்கேட்டிலிருந்து இளைஞர், யுவதிகளை பாதுகாக்க பிரதேச மட்ட குழு தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.