உலக நடன தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற “திக்கெட்டும் சதிரே” நிகழ்வு சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்த பணி மன்றத்தில் !
நூருல் ஹூதா உமர்
இந்து சமய கலாசார திணைக்களத்தின் ஏற்பாட்டில் விபுலானந்த கற்கைகள் நிலையம் அனுசரணையில் விபுலானந்த நாட்டிய நிருத்தியாலயா மாணவிகள் வழங்கிய உலக நடன தினம் ‘திக்கெட்டும் சதிரே’ நிகழ்வானது சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்த பணி மன்றத்தில் காரைதீவு பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு முன்னிலை அதிதியாக சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்களும் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசனும் கலந்துகொண்டனர். மேலும், சீர்பெறு அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் கலாநிதி புளோரன்ஸ் பாரதி கென்னடி கலந்து கொண்டார்.
முதன்மை அதிதிகள் வரிசையில் கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக நடன நாடக துறை தலைவர் கலாநிதி தாக்ஷாயினி பரமதேவன், கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஷர்மிளா ரஞ்சித்குமார் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலக உதவி கல்வி பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா, கல்முனை கல்வி வலய பரதநாட்டிய ஆசிரிய ஆலோசகர் ரீசா பத்ரண, சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்த பணி மன்ற தலைவர் வெ.ஜெகநாதன், கண்ணகி இந்து வித்தியாலய அதிபர் சி.திருக்குமார், விக்கினேஸ்வரா வித்தியாலய அதிபர் திருமதி தே.குலேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் விசேட அதிதிகளாக சுவாமி விபுலாநந்தர் பயிற்சி நிலைய இந்து சமய கலாசார கற்கைகள் நிறுவக நடன வளவாளர் ஆசிரியை திருமதி சர்மினி சுதாகரன், உதவி நடன வளவாளர் செல்வி ஜெயகோபன் தக்சாளினி, இந்து சமய கலாசார கற்கைகள் நிறுவக பண்ணிசை வளவாளர் திருமதி புவனேஸ்வரி ஜெயகணேஷ், விபுலானந்த மத்திய கல்லூரி நடன ஆசிரியர் திருமதி ராஜேந்திரன் சிவதர்சினி, இ.கி.மி.பெண்கள் வித்தியாலய நடன ஆசிரியர் திருமதி மிதுலா பஞ்சலிங்கம், சண்முகா மகா வித்தியாலய நடன ஆசிரியர் செல்வி ச.சதுர்ஷிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை