பாலமுனை பிரதேச வைத்தியசாலையில் ஆய்வுகூடம் வாகன தரப்பிடம் பிராந்தியப் பணிப்பாளரால் திறப்பு!
நூருள் ஹூதா உமர்
பாலமுனை பிரதேச வைத்தியசாலையில் பி.எஸ்.பி. திட்டத்தின் கீழ் மீள் புனரமைப்பு செய்யப்பட்ட வைத்திய ஆய்வுகூடம் மற்றும் சமையலறை என்பன திங்கட்கிழமை திறப்புவிழா செய்யப்பட்டதோடு குறித்த ஆய்வு கூடத்தை கல்முனை பிராந்தியத்துக்குரிய தனித்துவமானதும் பிரதானதுமான ஆய்வுகூடமாக மாற்றுவதற்கான திட்ட யோசனையும் கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளரால் மாகாண மற்றும் மத்திய அமைச்சின் சுகாதார பிரிவுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு கூடத்துக்கு பிரதேச மக்களினதும், அபிவிருத்தி குழுவினதும் அளப்பரிய பங்களிப்பு கிடைக்கப் பெற்றுள்ளதுடன் வைத்தியசாலையின் நலன்விரும்பிகளால் அன்பளிப்புச் செய்யப்பட்ட பொருள்களாலும் வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட வாகன தரிப்பிடமும் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
பாலமுனை பிரதேச வைத்தியசாலையின் பிரதேச வைத்திய அதிகாரி டக்டர் எம்.ஜே. நௌபல் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வுகளில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். மேலும் கௌரவ அதிதியாக பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் எம்.பி.ஏ. வாஜித் அவர்களும் சிறப்பு அதிதிகளாக திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.சி.எம். மாஹீர், அட்டாளைச்சேனை பிரதேச சபை முன்னாள் தலைவர் சட்டத்தரணி எம்.ஏ. அன்ஸில் மற்றும் சுகாதார பணிமனையின் பிரிவுத் தலைவர்கள், வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினர்களும் கலந்து
கருத்துக்களேதுமில்லை