அமரகீர்த்தி அத்துகோரலவிற்கு இன்று நாடளுமன்றில் ஒரு நிமிட மௌன அஞ்சலி!!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல படுகொலை செய்யப்பட்டு ஒருவருடம் பூர்த்தியாகியுள்ள நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
நாடாளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.
இதன்போது கடந்த வருடம் மே மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தில் நிட்டம்புவ பகுதியில் வைத்து படுகொலை செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் நினைவாக இன்று ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா கோரிக்கை விடுக்க சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இணக்கம் வெளியிட்டமைக்கு அமைவாக ஒரு நிமிடம் இந்த மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதேவேளை வாய்வழி கேள்விகளுக்குப் பின்னர் செஸ் வரி தொடர்பாகவும், துறைமுகம் மற்றும் விமான நிலைய மேம்பாட்டு வரிச் சட்டம் மற்றும் சிறப்பு வர்த்தக வரிச் சட்டத்தின் 8 விதிகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது.
மேலும், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழான 3 ஒழுங்குவிதிகள் மற்றும் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.
இதனையடுத்து, பிற்பகல் 5 மணி முதல் பிற்பகல் 5.30 வரை ஆளும் கட்சியினால் கொண்டு வரப்படும் பிரேரணைக்கு அமைய சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் இடம்பெறவுள்ளது.
கருத்துக்களேதுமில்லை