தொல்பொருள் திணைக்கள ஒத்துழைப்புடன் வடக்கு, கிழக்கில் பௌத்தமயமாக்கல் தீவிரம்! பல தகவல்களை வெளியிட்டார் சிறிதரன்
தொல்பொருள் திணைக்களத்தின் உதவியுடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் மத மற்றும் பூர்வீக உரிமைகள் பௌத்த மயமாக்கலுக்கு உட்படுத்தப்படுகிறது.அவரவர் உரிமைகளை பின்பற்ற இடமளிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சபையில் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –
சிங்கள பேரினவாத அரசாங்கம் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விட்டு மேற்கொண்ட 30 வருட கால யுத்தம் நிறைவடைந்துள்ள பின்னணியிலும், பௌத்த பேரினவாத ஆக்கிரமிப்புக்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தீவிரமடைந்துள்ளன.
தமிழர்களின் மத உரிமைகள் மற்றும் முஸ்லிம், கிறிஸ்தவ மக்களின் மத உரிமைகள் பௌத்த மதத்தை முன்னிலைப்படுத்தி அழிக்கப்படுகின்றன. இதற்கு தொல்பொருள் திணைக்களம் முழுமையாக ஒத்துழைப்பு வழங்குகிறது .
முழு நாடும் பொருளாதாரப் பாதிப்பில் பாதிக்கப்பட்டுள்ள பின்னணியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் சிங்கள மற்றும் பௌத்த கடும்போக்கான ஆக்கிரமிப்புக்குள் சிக்குண்டு தவிக்கிறார்கள். அவரவர் உரிமைகளை அவரவருக்கு வழங்குங்கள்.தமிழர்களின் பூர்வீக உரிமைகளை தொல்பொருள் என்று குறிப்பிட்டுக் கொண்டு கையகப்படுத்துவதை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் கோயில்கள்,காணிகள்,புராதன சின்னங்கள் பௌத்தமயமாக்களுக்குள்ளாக்கப்பட்
பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயம், வெடுக்குநாறி ஆதிலிங்கேஷ்வரர் ஆலயம், குறுந்தூர் மலை, உருத்திரபுரம் சிவன் கோயில், மன்னித்தலை சிவன் கோயில், கிருஷ்ணபுரம், நிலாவரை – ஆழம் காண முடியாத அதிசய கிணறு, கீரிமலை,மயிலிட்டி, மாதகல், நெடுந்தீவு வெடியரசன் கோட்டை, நயினாதீவு, மாவிட்டபுரம் சிவன் கோயில், திருக்கோணேஷ்வரம், கன்னியாய் வெந்நீரூற்று, சாம்பல் தீவு, மற்றும் கங்குவேலி சிவன் கோயில், கல்லடி ஆதி ஸ்ரீ மலைநீலி அம்மன் கோயில், இலங்கைத்துறை முகத்துவாரம் பெரியசாமி கோயில்,மூதூர் மலையடிப் பிள்ளையார் கோயில்,திருகோணேஷ்வரம் புனித மரியாள் கல்லாரி காணி, அரிசிமலை, திருகோணேஸ்வரம் பேரூந்து நிலையம், சேருவில் திருமங்களாய் சிவன் கோயில், தென்னமரவடி கந்தசுவாமிமலை முருகன் கோயில்,திரியாய் காணி அபகரிப்பு,குச்சவெளியில் அமைக்கப்படும் 31 பௌத்த விகாரைகள்,செம்பிமலை சிவன் கோயில்,இருதயபுரம் விநாயகர் கோயில், கூனித்தீவு முருகன் கோயில்,மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை, அம்பாறை உகந்தைமலை முருகன் கோயில், கச்சத்தீவு ஆகிய கோயில்கள் மற்றும் காணிகளில் சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பு தீவிரமடைந்துள்ளது.
தமிழர் தாயகத்தின் இதயபூமியான முல்லைத்தீவு மாவட்டத்தின் மணலாறு ஆரம்பிக்கும்பிரதேசமான பழைய செம்மலைப் பகுதியில் காலாகாலமாக இருந்துவரும் இந்துக்களின் ஆலயமான பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தை அபகரித்து அங்குபௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளமை, வவுனியா மாவட்டம், நெடுங்கேணி (வவுனியா வடக்கு) பிரதேச செயலாளர் பிரிவின் ஒலுமடு பாலமோட்டை கிராமத்தில் இருந்து கிட்டத்தட்ட 3மைல் தொலைவில் அமைந்துள்ளவெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய ஆக்கிரமிப்பு,முல்லைத்தீவு மாவட்டம், நெடுங்கேணி பிரதேசத்திலிருந்து வடகிழக்குத் திசையில் சுமார்14 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள தண்ணிமுறிப்புக் குளத்தின் வடக்குப் பக்கத்தில் குருந்தூர் மலை ஆக்கிரமிப்பு,
கிளிநொச்சி மாவட்டம்,கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவின் ஆளுகைக்குட்பட்ட உருத்திரபுரம் கிராமத்தில் இந்துக்களின் பொற்காலமாகக் கருதப்படும் சோழர்காலத்தில் முற்றுமுழுதாக திராவிடக் கட்டடக் கலைமரபைப் பின்பற்றி கட்டப்பட்டு மூர்த்தி தலம்இதீர்த்தம் என்பன இயல்பாய் அமையப்பெற்ற உருத்திரபுர நாயகி உடனுறை உருத்திரபுரீஸ்வரர் சிவாலயம் என்னும் வரலாற்றுத் தொன்மையும் பழமையும் வாய்ந்தசிவாலயத்தை அபகரிப்பதற்கான முயற்சி,கிளிநொச்சி மாவட்டம், பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கௌதாரிமுனை மண்ணித்தலை சிவன் கோவில் பணிகள் ,வழிபாடுகளுக்கு அனுமதி மறுப்பு, கிளிநொச்சி மாவட்டம்,கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கிருஸ்ணபுரம் கிராமத்தில் கடந்த முப்பது வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட பிள்ளையார் கோவில் அகற்றப்பட்டு புத்தரை சிலை வைக்கப்பட்டமை, யாழ்ப்பாண மாவட்டம் வலிகாமம் கிழக்கு பிரதேசத்தின் புத்தூரை அண்மித்திருக்கும் ஒருகிராமம்தான் நிலாவரை.
இந்த இடத்தில் இயற்கையாக அமைந்த ஆழங்காண முடியாத கிணற்றில் மேற்கொள்ளப்படும் ஆய்வுப்பணி,போர் முடிவுற்று 13 ஆண்டுகளைக் கடந்த பின்னரும் விடுவிக்கப்படாத நிலையில் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள யாழ்ப்பாணம் கீரிமலையில் இருந்த ஆதிலிங்கேஸ்வரர்ஆலயம் மற்றும் சடையம்மா மடம் என்பவற்றோடு அங்கிருந்த இந்துமத அடையாளங்கள் இடித்து அழிக்கப்பட்டுள்ளன
முற்றுமுழுதாக இந்து சமயத்தைப் பின்பற்றுகின்ற மக்கள் வாழும் யாழ்ப்பாண மாவட்டம்,தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள நாவற்குழி பகுதியில் நல்லிணக்கவிகாரை என்னும் பேரிலஅமைக்கப்பட்ட சமித்தி சுமண விகாரை மக்களின் எதிர்ப்புப்போராட்டங்களுக்கு மத்தியிலும் கடந்த 2023.03.18 அன்று மிகப் பிரமாண்டமான முறையில்பௌத்த மத சம்பிரதாயங்களுக்கு அமைய திறந்து வைக்கப்பட்டுள்ளமை ,யாழ்ப்பாண மாவட்டம், வலிகாமம் வடக்குஇ மயிலிட்டியில் அமைந்திருந்த பல நூறுவருடங்கள் பழைமையான வரசித்தி விநாயகர் ஆலயம் மற்றும் சென் மேரி தேவாலயம் ஆகியவை முற்றாக தரைமட்டம் ஆக்கப்பட்டு இராணுவ மாளிகை ஒன்று அவற்றின் மீதுகட்டப்பட்டுள்ளமை .
யாழ்ப்பாண மாவட்டம், தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தையிட்டிதெற்கு பிரதேசத்தில் திஸ்ஸ விகாரை என்னும் பெயரிலான புதிய விகாரை ஒன்று பொதுமக்களுக்குச் சொந்தமான காணியில் அமைக்கப்பட்டுஅந்தக் காணியில் குடியிருந்தபொது மக்கள் அங்கிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ளமை யாழ்ப்பாணத்தின் வலிகாமம்இமாதகல் பகுதியில் அமைந்துள்ள சம்பில்துறைப் பிரதேசத்தில்கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ் மக்களின் பெருமளவான நிலப்பகுதியில் மாபெரும் விகாரையொன்று அமைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தின் தனிப்பெரும் தீவான நெடுந்தீவு மண்ணின் கோட்டைக்காடு எனஅழைக்கப்படும் நெடுந்தீவு மேற்கு கிராம அலுவலர் பிரிவில் இன்றும் தமிழர் தம் பண்பாட்டு மரபியல் அடையாளமாகப் பேணப்பட்டு வருவதும் கி.மு.200 ஆம் ஆண்டுகாலப்பகுதியில் நெடுந்தீவு நயினாதீவு ஊர்காவற்றுறை காரைநகர்,தொல்புரம்,பூநகரி, மன்னார் போன்ற பகுதிகளை ஆட்சிசெய்த ஈழத்தமிழ் மன்னனான விஷ்ணு புத்திரவெடியரசன் காலத்தில் அமைக்கப்பட்டது மானவிஷ்ணுபுத்திர வெடியரசன் கோட்டையை பௌத்த தாதுகோபுரத்தின் எச்சமாக நிறுவுவதற்கான முனைப்புகள் தொல்பொருளியல்திணைக்களத்தினால் மிகத்துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை நயினாதீவு, மாவிட்டபுரம் சிவன் கோவில், திருக்கேதீஸ்வரம், கன்னியா வெந்நீரூற்று ,சாம்பல்தீவு புத்தர் சிலை உள்ளிட்ட இன்னும் பல் விடயங்களை புகைப்பட ஆதாரங்களுடன் .தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் ஸ்ரீதரன் சபையில் ஆற்றுப்படுத்தியுள்ளார்.இவை ஹன்சாட்டின் பதிவு செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கருத்துக்களேதுமில்லை