அரசாங்கத்தின் நிவாரணம் வழங்கும் திட்டத்தில் பெருந்தோட்டக் குடும்பங்களையும் உள்வாங்குக!  வேலுகுமார் வலியுறுத்து

புள்ளிவிவரங்களின் பிரகாரம் தனிநபர் ஒருவரின் வருமானம் 13 ஆயிரத்து 772 ரூபாவுக்கு குறைவாக இருந்தால் அது வறுமை நிலையாகும். அதன் பிரகாரம் தோட்டப்புறங்களின் வறுமை நிலை, சுமார் 56 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.

அந்தவகையில் அரசாங்கத்தின் நிவாரணங்கள் வழங்கும் திட்டத்தில் தோட்டங்களில் இருக்கும்  குடும்பங்களில் 50 சதவீத்துக்கு அதிகமானவர்கள் இதற்கு உள்வாங்கப்படவேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் –

2022 டிசெம்பர் மாத புள்ளிவிவரங்களுக்கு அமைய தனிநபர் ஒருவரின் வறுமை நிலை 13ஆயிரத்து 772 ரூபாவாக இருக்கிறது.  13ஆயிரத்தி 772 ரூபாவுக்கு குறைவாக பெறுகின்றபோது அது வறுமை நிலையைக் காட்டுகிறது.

அந்த வகையில், நாட்டில் இருக்கிற நகர, கிராம தோட்டப்புறங்கள் என பார்க்கும்போது தோட்டப்புறங்களின் வறுமை நிலை, சுமார் 56 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.

அந்தவகையில் நிவாரணங்கள் வழங்கும் திட்டத்தில் தோட்டங்களில் இருக்கும்  குடும்பங்களில் 50 சதவீத்துக்கு அதிகமானவர்கள் இதற்கு உள்வாங்கப்படவேண்டும்.

ஒரு தனிநபருக்குரிய வறுமைக்குரிய வருமானம் 13 ஆயிரத்து 772 ரூபாவாக இருக்கும் போது 4 பேர் கொண்ட குடும்பமாக இருந்தால் 55 ஆயிரத்தி 88 ரூபா அவர்களின் குறைந்தபட்ச வருமானமாக இருக்கவேண்டும்.

3பேர் கொண்ட குடும்பமாக இருந்தால் அவர்களின் வருமானம் 41ஆயிரத்தி 316 ரூபாவாக இருக்கவேண்டும். ஆனால் தோட்டப்புறங்களில் இருப்பவர்களின் வருமானம் இதனைவிட மிக குறைவாகவே இருந்து வருகிறது.

அதேபோன்று தோட்டங்களில் ஒரு லயத்தில் பல குடுப்பங்கள் இருந்து வரும் சூழலே இருந்து வருகிறது. ஆனால் அரசாங்கத்தின் நிவாரண திட்டத்தின்போது ஒரு லயத்தில் ஒரு குடும்பமாகவே கணக்கிட்டு, அவர்களை உள்வாங்கும் நடவடிக்கையே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனால் அரசாங்கம் இந்த வேலைத்திட்டத்துக்கு எந்த நியதியின் அடிப்படையில் வறுமையில் உள்ளவர்கள் உள்வாங்கப்படுகிறார்கள்? அந்த நியதிகள் என்ன என்பதை பகிரங்கப்படுத்தி வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவேண்டிய ஊழியர் சேமலாம் மற்றும் நம்பிக்கை நிதியத்தை செலுத்த தவறிய தொழிலதிபர்களுககு எதிராக 15 ஆயிரம் வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கின்றன.

இதில் அரச நிறுவனங்களும் உள்ளடங்குகின்றன. குறிப்பாக ஜே.ஈ.டி.பி நிறுவனம், மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை, எஸ்.எல்.எஸ்.பி.சி நிறுவனம் போன்ற அரச நிறுவனங்களுக்கு எதிராகவும் ஈ,பி,எப். ஈடிஎப். நிலுவை தொடர்பான வழக்குகளும் பேசப்பட்டு வருகின்றன.

அத்துடன் மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை காணிகளை விற்பனயை செய்யும் பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. கண்டி பிரதேசத்தில் மக்கள் இதற்கு எதிராகப் பல போராட்டங்களை மேற்கொண்டு வருகிகின்றமையையும் கண்டுகொள்ளாமல் இந்த பணியை மேற்கொண்டு வருகிறது. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.