முன்பள்ளி மாணவர்களுக்கு போஷாக்கு உணவு சாய்ந்தமருது பிரதேச செயலகத்தால் வழங்கல்
நூருள் {ஹதா உமர்
சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில்
முன்பள்ளி மாணவர்களுக்கு போஷாக்கு உணவு வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது 13 ஆம் பிரிவில் ஏ.ஆர்.எம். முன்பள்ளி பாடசாலை 145 மாணவர்களுக்கு தொடர்ச்சியாக 02 மாதங்களுக்கு போஷாக்கு உணவு வழங்கும் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.
சமுர்த்தி சமூக அபிவிருத்தி உதவியாளர் யூ.எல்.ஜஃபரின் நெறிப்படுத்தலில் சமுர்த்தி தலைமைப் பீட சிரேஷ்ட முகாமையாளர் ஏ.சீ.ஏ. நஜீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இதில் உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ. முவ ஃபிக்கா, கணக்காளர் ஏ.ஜே. நுஸ்ரத் பானு, சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ்.றிபாயா, கருத்திட்ட முகாமையாளர் றியாத் ஏ மஜீத், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம்.காலிதீன், குடும்ப நல உத்தியோகத்தர்களான வி.நலாஜினி, ஏ.ஆர். சாஜிதா பர்வின், மாணவர்களின் பெற்றோர்களும், சமுர்த்தி சங்கத்தின் நிருவாக உறுப்பினர்கள் vஉள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை