யாழ்ப்பாண வாழைப்பழத்துக்கு சர்வதேச சந்தைகளில் கிராக்கி! அமைச்சர் டக்ளஸ் பாராட்டு
கிடைக்கின்ற வாய்ப்புக்களை சரியான முறையில் பயன்படுத்தி உள்ளூர் உற்பத்திகளை சர்வதேச சந்தைகளுக்கு எடுத்துச் செல்லுகின்ற போது, எமது மக்களின் பொருளாதாரத்தை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்ல முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம்- புத்தூரில் அமைக்கப்பட்டுள்ள, வாழைப்பழ ஏற்றுமதி தொழிற்சாலையை அண்மையில் பார்வையிட்டபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
உலக வங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் நிதியுதவியில் விவசாய செயற்பாடுகளை நவீனமயப்படுத்தும் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள தொழிற்சாலையில் பதனிடப்படுகின்ற கதலி வாழைப்பழங்கள் டுபாய் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு முதற்கட்டமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் மூலம் சுமார் 250 விவசாயிகள் நேரடியாக பயனடைந்துள்ளதுடன் கதலி வாழைப்பழத்துக்கு நியாயமான விலையையும் யாழ்ப்பாண விவசாயிகள் பெறத் தொடங்கியுள்ளனர்.
எதிர்வரும் மாதங்களில் மேலும் ஏற்றுமதியை விஸ்தரித்து நேரடியாக பயனடையும் விவசாயிகளின் எண்ணிக்கையை 700 ஆக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை எதிர்வரும் மாதங்களில் வாரத்திற்கு 22 ஆயிரம் கிலோ கதலி வாழைப்பழம் யாழ்ப்பாணத்தில் இருந்து ஏற்றுமதி செய்ய எதிர்பார்க்கப்படுகின்றதாகவும் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை