முள்ளிவாய்க்கால் கஞ்சி வவுனியாவில் வழங்கல்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு நேற்று (வியாழக்கிழமை) வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்துக்கு முன்பாக இடம்பெற்றது.

தமிழர் தாயகம் எங்கும் பயணித்து முள்ளிவாய்க்கால் கஞ்சியைப் பரிமாறி தமிழ் மக்கள் இனவழிப்புக்கு உள்ளான வரலாற்றையும் , வலிகளையும் இளைய தலைமுறையினருக்கு கடத்தும் செயற்பாட்டினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர்.

அந்தவகையில் நேற்று (வியாழக்கிழமை) மதியம் ஒரு மணியளவில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலத்திற்கு முன்பாக குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது பாடசாலை மாணவர், பொதுமக்கள் எனப் பலரும் கஞ்சி அருந்திச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வில் வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளும் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.