சாய்ந்தமருது சமுர்த்தி உத்தியோகத்தர்களால் சமுர்த்தி முகாமையாளர் ஜுனைதா கௌரவிப்பு
நூருல் ஹூதா உமர்
சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி வங்கி சங்கத்தின் முகாமைத்துவ பணிப்பாளராக கடந்த ஆறு வருடங்களாகக் கடமையாற்றி இறக்காம பிரதேச செயலகத்துக்கு இடமாற்றம் பெற்றுச்செல்லும் ஏ.எல்.யூ. ஜுனைதாவுக்கு பிரியாவிடை நிகழ்வு சமுர்த்தி வங்கி சங்க கூட்டம் மண்டபத்தில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி பிரிவின் ஏற்பாட்டில் தலைமைப் பீட சிரேஷ்ட சமுர்த்தி முகாமையாளர் ஏ.சி.ஏ. நஜீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் சமுர்த்தி வங்கி சங்கத்தின் சிரேஷ்ட முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.எல்.யூ. ஜுனைதா, சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ்.றிபாயா, கருத்திட்ட முகாமையாளர் றியாத் ஏ.மஜீத் உள்ளிட்ட உதவி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், உள்ளக கணக்காய்வு பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கணனி உதவியாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.எல்.யூ. ஜுனைதாவின் சேவைகள் மற்றும் அவரின் ஆளுமைகள் பற்றி அதிதிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் நினைவுகூர்ந்து பாராட்டி, வாழ்த்தினர். இதில் சமுர்த்தி வங்கிச் சங்கத்தின் சார்பில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஏ.எப்.றிகாஸா ஷர்பீனினால் முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.எல்.யூ. ஜுனைதா பற்றி வாழ்த்துப்பா வாசிக்கப்பட்டு கையளித்து வைக்கப்பட்டது.
மேலும் முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.எல்.யூ. ஜுனைதாவின் கடந்த ஆறு வருட கால மக்கள் சேவையைப் பாராட்டி, கௌரவிக்கு முகமாக சமுர்த்தி வங்கிச் சங்கம், சமுர்த்தி வங்கி, பிரதேச செயலக சமுர்த்திப் பிரிவு, கள சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், உள்ளக கணக்காய்வு பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் இணைந்து பென்னாடை போர்த்தி, அன்பளிப்புகளையும் வழங்கி கௌரவித்தனர்
கருத்துக்களேதுமில்லை