தெமட்டகொட வேலைத்தளத்துக்குள் பிரவேசித்த மூவர் பாதுகாப்பு அதிகாரியின் துப்பாக்கியை அபகரிக்க முயற்சி!   வானை நோக்கி சூடு

ரயில்வே திணைக்களத்துக்குச் சொந்தமான தெமட்டகொட வேலைத்தளத்துக்குள் பிரவேசித்த மூவரை கைதுசெய்யும் வகையில் வானத்தை நோக்கி சுட்ட பின்னர், அவர்களில் இருவரை கைதுசெய்தனர் என ரயில்வே பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.

54 ஏக்கர் பரப்பளவுள்ள தெமட்டகொட ரயில்வே வேலைத்தளத்தை மக்கள் நீண்ட காலமாக பயன்படுத்தி, அங்கிருந்து பல்வேறு பொருள்களைத் திருடி வருகின்றனர் எனப் பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், அந்த வேலைத்தளத்துக்குள் மூன்று திருடர்கள் நுழைந்ததை அறிந்த ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களைப் பிடிக்க முயன்றபோது, ஒருவர் பாதுகாப்பு அதிகாரியிடம் இருந்த துப்பாக்கியைப் பறிக்க முயன்றுள்ளார்.

அப்போது மற்றைய பாதுகாப்புக் குழுவினர் வானை நோக்கி துப்பாக்கியால் சுட, இரண்டு சந்தேக நபர்களை மடக்கிப் பிடித்து கைதுசெய்துள்ளனர்.

இதன்போது இந்த மூன்று திருடர்களையும் சுற்றிவளைத்து மடக்கிப் பிடிக்க சுமார் இரண்டு மணித்தியாலங்களாக பாதுகாப்பு அதிகாரிகள் முயன்றபோதும், அவர்களில் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.

மேலும், இந்தக் கும்பல் டீசல், ரயில் உதிரிப்பாகங்கள் மற்றும் கம்பிகளை திருடியதாகவும் ரயில்வே பாதுகாப்புத் துறை கூறுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.