புதிதாகப் பதிக்கப்பட்டுவருகின்ற கல் தொடர்பில் யாழ்.மாநகர ஆணையாளர் கவனத்தில் கொள்க! பொதுமக்கள் கோரிக்கை
யாழ்ப்பாணம் கல்வியங்காடு செங்குந்தா பொது சந்தை புதிய கடைத்தொகுதி ஆடியபாதம் வீதி வெளிப்புற பக்கமாக புதிகாக பதிக்கப்பட்டுவரும் நடைபாதை அழகுபடுத்தல் கல், ஆடியபாதம் வீதியை பயன்படுத்தும் பொதுமக்களுக்கும் வாகன சாரதிகளுக்கும் இடையூறாக அமைக்கப்பட்டுவருவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றஞ்சாட்டி கருத்துத் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் ரி.ஜெயசீலன் கவனத்தில் கொள்ளவேண்டும் அத்தோடு பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை சட்டதிட்டத்துக்கு அமைவாக புனரமைப்பு வேலைத்திட்டங்களை செயற்படுத்த வேண்டும் என வர்த்தகர்கள், வாகன சாரதிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை