முள்ளிவாய்க்கால் படுகொலையாளிகளை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும்! வாஜிலிங்கம் வலியுறுத்தல்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என தமிழ் த் தேசியக் கட்சி செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தை முன்னிட்டு இன்று, அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வை அடுத்து அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி அஞ்சலி நிகழ்வில் முன்னாள் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் சதீஸ், திருமதி சிவாஜிலிங்கம் மறறும் சமூக அரசியல் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இங்கு மேலும் உரையாற்றிய எம்.கே.சிவாஜிலிங்கம் ‘இலங்கையின் அரச படைகளினாலும், சிங்களக் காடையர் குழுக்களாலும் தமிழ் இனப்படுகொலை செய்யப்பட்ட ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட தமிழ் பொதுமக்களுக்கு எமது அஞ்சலிகள்.

தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலை, போர்க் குற்றங்களுக்கான குற்றவாளிகளைச் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி எமது மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்வோம்.

படுகொலைகள் மீள நிகழாமையை உறுதிப்படுத்தவும் நீதி கிடைக்கவும் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும் அரசியல் தீர்வைக் காண சுதந்திரத்துக்கான பொதுசன வாக்கெடுப்பு ஒன்றை நடத்த வேண்டும்.

இலங்கையின் வடக்கு – கிழக்குப் பிராந்தியத்தில் வசிக்கும் மக்களும், 1948 ஆம் ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது முதல் வாழ்ந்துவரும் புலம்பெயர் மக்கள் உட்பட அனைவரும் கலந்துகொள்ளும் வகையில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்இ – என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.