ஜெரோம் நாடு திரும்பியதும் உடன் கைதுசெய்யப்படுவார்! பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

மதநிந்தனை குற்றச்சாட்டின் கீழ் சிஐடியினரின் விசாரணையை எதிர்கொண்டுள்ள போதகர் ஜெரோம் பெர்ணாண்டோ நாடு திரும்பியதும் உடனடியாக கைதுசெய்யப்படுவார் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் பேச்சாளர் நிகாதல்டுவ இதனைத் தெரிவித்துள்ளதுடன் ஜெரோம் பெர்ணாண்டோவிற்கு எதிராக நீதிமன்றம் பயணத்தடையை பிறப்பித்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிஐடியினருக்கு ஜெரோம் பெர்ணாண்டோ தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன எனத்  தெரிவித்துள்ள பொலிஸ் பேச்சாளர் செவ்வாய்க்கிழமை சிஐடியினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகக்  குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றம் தனிநபருக்கு எதிராக பயணத்தடை விதித்தால் அவர் நாட்டிலிருந்து வெளியேற முடியாது நாடு திரும்பியவுடன் அவரை கைதுசெய்யலாம் எனவும் பொலிஸ்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.