முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் மன்னார் மாவட்டத்திலும் உணர்வெழுச்சி!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் மன்னார் மாவட்டத்திலும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று (வியாழக்கிழமை( காலை 8 மணியளவில் மன்னார் பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது,
தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் மத தலைவர்கள் பொது மக்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.
இதன் போது இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த மக்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது,
கருத்துக்களேதுமில்லை