பொரளையில் இடம்பெற்றுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு இடையூறு;பொலிஸார் குவிப்பு!

கொழும்பு – பொரளையில் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை சீர்குலைக்க ஒரு குழு முயற்சித்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு கிழக்கில் இடம்பெறும் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் இந்நிகழ்வு இன்று இடம்பெற்றது.

இந்நிலையில் பொரளை சுற்றுவட்டத்தில் இடம்பெறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு ஒரு சில தரப்பினர் இடையூறு விளைவித்து வருகின்றனர்.

இந்த நினைவேந்தல் நிகழ்வைக் குழப்பும் வகையில், பயங்கரவாதத்தை தோற்கடிப்போம், புலிகளை நினைவுகூர வேண்டாம் எனற பதாதைகளை ஏந்தி, போராட்டத்தை மேற்கொண்டனர்.

இதனை அடுத்து அங்கு கலகம் அடக்கும் பொலிஸாரும் குவிக்கப்பட்டனர்.

அருட்தந்தை சத்திவேல், பிரபல சட்டத்தரணிகள், மனித உரிமை ஆர்வலர் சந்தியா எக்னலிகொட உள்ளிட்டக் குழுவினர் மிகவும் அமைதியான முறையில் நினைவேந்தல் நிகழ்வில் ஈடுபட்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.