கனடா பூநகரி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் விக்கேஸ்வராவுக்கு பல்நோக்கு மண்டபம்!

கனடா  பூநகரி ஒன்றியம்தைச் சேர்ந்த செல்வக்குமாரின் நிதி அனுசரணையில் பூநகரி விக்னேஸ்வரா வித்தியாலயத்துக்கு பொதுநோக்கு மண்டபம் அமைக்கப்பட்டு கடந்த வாரம் மாணவர்களின் பாவனைக்காகத் திறந்துவைக்கப்பட்டது.

பாடசாலை முதல்வர் லயன் ஜி.லெனின்குமார் தலைமையில் நடைபெற்ற மேற்படி திறப்பு விழாவில் கிளிநொச்சி தெற்கு கல்வி வலய விசேட கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் இ.ஜெயசேகரம் பிரதம விருந்தினராகவும் சிறப்பு விருந்தினர்களாக அனுசரணையாளர் செல்வரட்ணத்தின் குடும்ப உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

p11 லட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட மண்டபத் திறப்பு விழாவில் விருந்தினர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றும் நிகழ்வு ஆரம்பமாகியயது. முதலில்
செல்வரத்தினம் தம்பதிகளின் புதல்வன் அமரர் செ.உதயன் ஞாபகார்த்தமாக அவரது அண்ணரான கனடா
வாழ் செ.செல்வக்குமார் நிதிப்பங்களிப்பால் அமையப் பெற்ற மண்டபம் திரை நீக்கம்
செய்யப்பட்டு நாடா வெட்டித் திறந்து வைக்கப்பட்டது.

இதில் மாணவர்களின் நடனம், பாடல், கவிதை என கலைநிகழ்வுகளும் நடைபெற்றன. இறுதியில்
விருந்தினர்கள் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்படனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.