பிரித்தானிய அமைப்புகளால் ஐக்கிய இராச்சியத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு பேரணி மே 18 நடந்தது!

உலகளாவிய ரீதியில்  வியாழக்கிழமை மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இறுதி நாள் நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

அந்த வகையில் பிரித்தானியாவின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் தமிழ் இளையோர் அமைப்பு என்பன ஒன்றிணைந்து  ஐக்கிய இராச்சியம் ஊடாக இலங்கை அரசுக்கு அழுத்தம் வழங்கும் முகமாக ஐக்கிய இராச்சியத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு பேரணி உணர்வு பூர்வமாக  இடம்பெற்றதுடன், குறித்த பேரணியில் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.