போதகர்களுடன் எவ்வித தொடர்புகளும் இல்லை! மஹிந்த ராஜபக்ஷ மறுப்பு

ஜெரோம் பெர்னாண்டோ மற்றும் உபேர்ட் ஏஞ்சல் ஆகிய போதகர்களை ஒருமுறைதான் சந்தித்துள்ளதாகவும் அவர்களுடன் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குறித்த போதகர்களுடன் தனக்கு தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும் வகையில் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜெரோம் பெர்னாண்டோவின் காரியாலயத்தால் கோரிக்கை விடுக்கப்பட்டதன் காரணமாகவே தாம் அவர்களை ஒருமுறை சந்தித்ததாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பௌத்தம் மற்றும் ஏனைய மதங்கள் தொடர்பில் ஜெரோம் பெர்னாண்டோ வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தாம் கண்டிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை அல்லது வெறுப்பை ஏற்படுத்தும் இவ்வாறான கருத்துக்களுக்கு எமது நாட்டில் இடமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உத்தியோகபூர்வ சந்திப்பு என்பதால் புகைப்படங்கள் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டதாகவும், அதைத் தவிர அவர்களுடன் தனக்கு தனிப்பட்ட உறவு இல்லை என்றும் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.