வடமாகாண பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளராக சத்தியமூர்த்தி நியமனம்!
வடக்கு மாகாணத்தின் பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்திய
கலாநிதி சத்தியமூர்த்தி பொறுப்பேற்றுக் கொண்டார்.
நேற்று (வெள்ளிக்கிழமை) இவர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்,
வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்படும் வரை பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றுவதோடு யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் பதவிக்கு மேலதிகமாக இக்கடமையை ஆற்றுவார் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது
கருத்துக்களேதுமில்லை