வட்டுக்கோட்டையில் கறுவா செய்கையை ஊக்குவிக்க விசேட செலயலமர்வு நடந்தது!
வடக்கில் கறுவா செய்கையை ஊக்குவிக்கும் முகமாகமான செயலமர்வொன்று சனிக்கிழமை வட்டுக்கோட்டை பங்குரு முருகன் கோவில் சமூக மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த செயலமர்வில் கறுவா ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி ஜீ.ஜீ.ஜெயசிங்க பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, விளக்க உரை நிகழ்த்தினார்.
அதனைவிட கறுவா ஆராய்ச்சி நிலையத்தின் அதிகாரிகள் பலரும் இந்த செயலமர்வில் கலந்துகொண்டு, கருத்துத் தெரிவித்ததுடன், பொதுமக்களின் கேள்விகள், சந்தேகங்களுக்குப் பதிலளித்தனர்.
கறுவாச் செய்கையை எவ்வாறு மேற்கொள்ள முடியும் என்பதற்கான செய்முறை விளக்கம் இங்கு வழங்கப்பட்ட அதேவேளை கறுவா கன்றுகளும் இலவசமாக வழங்கப்பட்டன.
கருத்துக்களேதுமில்லை