இலங்கை கிரிக்கெட் சபை தலைவராக ஷம்மி சில்வா போட்டியின்றி தெரிவானார்!
2023 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவராக ஷம்மி சில்வா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கொழும்பில் தற்போது நடைபெற்று வரும் வருடாந்த பொதுக் கூட்டத்தில் இலங்கை கிரிக்கெட் சபையின் தேர்தல் குழு இந்த முடிவை அறிவித்தது.
2019 இல் முதல் தடவையாக இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஷம்மி சில்வா மூன்றாவது முறையாக மீண்டும் பதவியேற்கவுள்ளார்
கருத்துக்களேதுமில்லை