புலிப் பயங்கரவாதத்தை ஒழித்ததன்மூலம் அனைவரும் நிம்மதியாக வாழ முடிந்தது! இராணுவத் தளபதி பெருமிதம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை இல்லாதொழித்ததன் மூலம் தேசத்தை ஒன்றிணைத்ததுடன் நாட்டில் அனைவரும் சமாதானமாக வாழ வழிவகுத்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே தெரிவித்துள்ளார்.
இராணுவ நினைவு தினத்தை முன்னிட்டு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், மூன்று தசாப்த கால யுத்தத்தின் போது நாடு முழுவதிலும் உள்ள மக்கள் சொல்லொணா சிரமங்களையும், துன்பங்களையும் அனுபவித்தார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, விடுதலைப் புலிகளைத் தோற்கடித்ததன் பின்னர் நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதற்காக இராணுவ வீரர்கள் பெருமளவில் பங்களித்தார்கள் என்றும் இதனை இலங்கையர்கள் தொடர்ந்தும் நினைவில்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதத்தை ஒழித்தல், பேரிடர் மற்றும் கொரோனா தொற்றுநோய் கட்டுப்பாடு ஆகியவற்றின் போது, தங்கள் சொந்த உயிருக்கு ஆபத்துகளைப் பொருட்படுத்தாமல், இராணுவம், மீட்பு மற்றும் உதவிக்கு வந்தது என்றும் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை