சிங்கப்பூரில் மர்மமாக இறந்த பெண்ணின் சடலம் நேற்று இலங்கை வந்தடைந்தது!
சிங்கப்பூரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த இலங்கை பெண்ணின் சடலம் நேற்று (சனிக்கிழமை) இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
தங்கொடுவ – மொட்டேமுல்ல பகுதியைச் சேர்ந்த 41 வயதான நதிகா தில்ஹானி பெர்னாண்டோ என்ற திருமணமான பெண்ணே இவ்வாறு உயிரிழந்திருந்தார்.
குறித்த பெண் சிங்கப்பூருக்கு வீட்டு பணிப்பெண்ணாக சென்ற நிலையில், வீட்டு உரிமையாளரின் கடும் அழுத்தத்தை தாங்கிக்கொள்ள முடியாத நிலையில் அவர் அடுக்குமாடி கட்டடத்தில் இருந்து பாய்ந்த காணொளியொன்றும் வெளியாகியுள்ளது.
சிங்கப்பூர் பிரேத பரிசோதனை அறிக்கையில், உயரமான மாடியில் இருந்து விழுந்ததில் ஏற்பட்ட காயங்களால் மரணம் ஏற்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில்,அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், விசாரணை நடத்துமாறும் அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்த நிலையில், சடலம் நீர்கொழும்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அதன்படி நேற்று இரவு நடிகாவின் சடலம் நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக குடும்ப உறவினர்கள் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனையின் பின்னர் நடிகாவின் பூதவுடல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தங்கொடுவ, மோதமுல்லையில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.
இந்நிலையில், சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயமும் அவரது மரணம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை