அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய புதிய ஏற்பாட்டாளராக மதுஷன்
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் புதிய ஏற்பாட்டாளராக மதுஷன் சந்திரஜித் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
நேற்று சனிக்கிழமை (20) ரஜரட்டை பல்கலைக்கழகத்தில் நடந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் வருடாந்த ஒன்று கூடலில் மதுஷன் தெரிவாகியுள்ளார்.
இவர் பேராதனை பல்கலைக்கழகத்தின் இணைந்த சுகாதார பீடத்தைச் சேர்ந்த மாணவர் ஆவார்.
இதற்கு முன்னர் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளராக வசந்த முதலிகே கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை