கல்முனையில் தொழுநோய் பரிசோதனைகள் சிகிச்சைகளையும் விரிவுபடுத்த நடவடிக்கை!

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம் றிபாஸின் ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்கும் அமைவாக கல்முனை பிராந்திய தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.ஏ.சீ.எம். பசாலால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கேட்போர் கூடத்தில் தொழுநோயை கண்டறிவதற்கும் சிகிச்சைகளை விரைவுப்படுத்துவதற்குமான கலந்துரையாடல் தேசிய தொழுநோய் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் டாக்டர் பிரசாத் ரணவீரரின் பங்குபற்றுதலுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தக் கலந்துரையாடலில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருடன் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் எம்.பி.ஏ.வாஜித், பிராந்திய தொற்றுநோய் தடுப்பியலாளர் வைத்தியர் எம்.ஏ.சி.எம். பசால் உள்ளிட்ட பிரிவு தலைவர்களும், கிராம உத்தியோகத்தர்களும், சுகாதாரத்துறை ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

இந்தக் கலந்துரையாடலின் போது கல்முனை பிராந்தியத்தில் தொழுநோயைக் கண்டறிவதற்கான பொறிமுறைகளை இலகுபடுத்துவதற்கும் துரிதப்படுத்துவதற்கும் அதற்கான சிகிச்சைகளை மக்கள் அச்சமின்றி பெற்றுக் கொள்வதற்கான பொறிமுறை  பற்றி மக்களை தெளிவுபடுத்துவதற்குமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக பணிப்பாளர் தெரிவித்தார். மேற்படி நிகழ்வில் பங்கு பற்றிய தேசிய தொழுநோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் தனது உரையின் போது கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தொழுநோய் கண்டறிதலுக்கான செயற்பாடுகள் மற்றும் அதனைக் கட்டுப்படுத்தி சிறப்பாக முகாமை செய்வது தொடர்பிலும்  தமது திருப்தியை வெளியிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.