மின்சார அமைச்சும் சுயாதீன ஆணைக் குழுவும் இணக்கப்பாட்டுடன் செயற்படுகின்றமை அவசியம்! அமைச்சர் ஜீவன் வலியுறுத்து

நாடு நெருக்கடியான நிலைமையை எதிர்நோக்கும் போது சில இறுக்கமான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டி நேரிடும். இப்போது மட்டுமின்றி நாடு சுதந்திரமடைந்த காலம் தொட்டு அவ்வாறான தீர்மானங்கள் எடுக்கப்பட்டு வந்துள்ளன. அதனால் மின்சாரம் தொடர்பான அமைச்சும் சுயாதீன ஆணைக்குழுவும் இணக்கப்பாட்டுடன் செயற்படுவது அவசியமாகும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் –

மின்சாரம் தொடர்பான அமைச்சும் சுயாதீன ஆணைக்குழுவும் இணக்கப்பாட்டுடன் செயற்படுவது அவசியம். அந்த வகையில் அதற்கு சிறந்த சுயாதீனமாக செயல்படக்கூடிய தலைவர் ஒருவர் அவசியமாகும்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உட்பட எதிர்க்கட்சியினர் விவாதத்தில் உரையாற்றிய போது முன்வைத்த கூற்றுக்களால் தவறான கருத்துக்கள் மக்களை போய் சேரக் கூடிய நிலை ஏற்படலாம்.

நாடு நெருக்கடியான நிலைமையை எதிர் நோக்கும் போது சில இறுக்கமான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டி நேரிடும். இப்போது மட்டுமின்றி நாடு சுதந்திரமடைந்த காலம் தொட்டு அவ்வாறான தீர்மானங்கள் எடுக்கப்பட்டு வந்துள்ளன. நாட்டை நெருக்கடி நிலையிலிருந்து மீட்டெடுக்கும் வரை எதிர்வரும் டிசெம்பர் மாதம் வரை அவ்வாறான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படலாம்.

மேலும் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் பிளவு பட்டு செயற்படுவதை தவிர்த்து ஒற்றுமையுடன் செயற்படுவதே சிறந்தது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள முடியாதவை. தமிழ் முற்போக்கு கூட்டணி கட்சியில் அங்கம் வகிக்கும் சிலர் அவ்வாறான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

ஆனால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மூலமே அவ்வாறான கட்சிகள் உருவாகின என்பதையும் இவர்கள் மறந்து விடக்கூடாது. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.