பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகமாக டிக்கிரி கே. ஜயதிலக நியமனம்

புதிய பதவியணித் தலைமை அதிகாரியும், பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம் பதவிக்கு பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகமாகப் பணியாற்றிய டிக்கிரி.கே ஜயதிலக 23ஆம் திகதி முதல் நியமிக்கப்பட்டிருப்பதாக பிரதி சபாநாயகர் சபைக்கு அறிவித்தார்

2002ஆம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்துடன் இணைந்து தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்த டிக்கிரி கே.ஜயதிலக, அரச சட்டத்தரணியாக மஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் மற்றும் மேல் நீதிமன்றங்கள் பலவற்றில் வழக்குகளுக்காக ஆஜராகியுள்ளார்.

2006ஆம் ஆண்டு நீதிமன்ற சேவையில் இணைந்த அவர் மஜிஸ்திரேட் நீதிபதியாக, மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களில் சேவையாற்றியுள்ளார்.

2015ஆம் ஆண்டு உதவிச் செயலாளர் நாயகமாக இலங்கைப் பாராளுமுன்றத்தில் சேவையில் இணைந்துகொண்ட இவர், சட்டவாக்க சேவைகள் தொடர்பான உதவிச் செயலாளர் நாயகமாகப் பணியாற்றினார்.

டி.கே.ஜயதிலக கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டமானிக் கல்வியைப் பெற்றிருப்பதுடன், இங்கிலாந்தின் நொத்தம்பிரியா பல்கலைக்கழகத்தில் சட்ட முதுகலைமானிப் பட்டத்தைப் பெற்றுள்ளார். சமூகம்சார் சீர்திருத்தம் தொடர்பில் வெளியீடுகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.