இறக்குமதி கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்தப்படும்! மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு
எதிர்காலத்தில் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட கருத்து தெரிவிக்கையிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை 70 வீதம் ஆக இருந்த பணவீக்கம் இப்போது 30 வீதத்தை எட்டியுள்ளது, நான்காவது காலாண்டில் பணவீக்கம் ஒற்றை இலக்கத்தை எட்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மூலதனப் பரிவர்த்தனைகளுக்கான கட்டுப்பாடுகளை முறையாகத் தளர்த்துவோம் என்றும் இவை இரண்டும் வணிக நடவடிக்கைகளை அதிகரிக்க உதவும். என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை