உடையார்கட்டு வெள்ளப்பள்ளம்குளம் தனியாரால் அடாத்தாக ஆக்கிரமிப்பு!  சம்பவ இடத்திற்கு சாள்ஸ் எம்.பி விஜயம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட உடையார்கட்டு பகுதியில் வெள்ளப்பள்ளம் குளம் அடாத்தாகாக ஆக்கிரமிப்பு செய்வதை  நேற்று (சனிக்கிழமை) நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் நேரில் சென்று பார்வையிட்டார்.

வெள்ளப்பள்ளம் குளம் தனியார் ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்டு எல்லையிடப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனுக்கு அக்கிராம மக்களால் தெரிவிக்கப்பட்டதன் பிரகாரம் சம்பவ இடத்துக்கு சென்று இது தொடர்பாக சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் அதிகாரிகளுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு உடனடியாக குளத்தை எல்லையிடப்படுவதை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

கமநல சேவை திணைக்களத்தினரால் எல்லையிடப்பட்ட குளத்தை தனியார் ஆக்கிரமிப்பதால் அப்பகுதி மக்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்கொள்ளவதை நேரடியாக அப்பகுதி மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தனர்.

சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக  நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தாகத் தெரிவித்தார்

குறித்த விடயம் தொடர்பில் அதிகாரிகள் அசமந்த போக்காக உள்ளனர் என மக்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். (

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.