ஆறு. திருமுருகனின் பிறந்த தினத்தில் தெல்லிப்பழையில் இரத்ததான முகாம்!
தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவரும் சிவபூமி அறக்கட்டளை நிறுவனத்தின் ஸ்தாபகரும் சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் ஓய்வுநிலை அதிபருமாகிய செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகனின் 62 ஆவது பிறந்ததினம் இன்றாகும்.
தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான நிர்வாகசபை, தெல்லிப்பழை இந்து இளைஞர் சங்கம், துர்க்காதேவி மகளிர் இல்லம், மாதர் சங்கம் என்பவற்றோடு தெல்லிப்பழை இளைஞர்கள் இணைந்து நேற்று (சனிக்கிழமை) தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான வீதியில் அமைந்துள்ள சிவத்தமிழ்ச் செல்வி ஆய்வு நூலகத்தில் மாபெரும் இரத்ததான முகாம் நடத்தப்பட்டது.
காலை 8 மணிக்கு ஆரம்பமாகி மாலைவரை நடைபெற்ற இந்த இரத்ததான முகாமில் பெருமளவான இளைஞர், யுவதிகள் கலந்து உயிர்காக்கும் உன்னத பணியில் ஈடுபட்டனர்
கருத்துக்களேதுமில்லை