மனிதநேய செயற்பாட்டாளர் டேவிட் நல்லரத்தினத்துக்கு பக்ரைய்ன் நாட்டு அரசாங்கத்தால் மகத்தான கௌரவம்!

ஸ்கொட்லாந்தை தலைமையகமாக கொண்டு உலகளாவிய ரீதியில் மனித நேய பணிகளை முன்னின்று மேற்கொண்டு வருகின்ற Cross Ethnic Community சர்வதேச மனித நேய தொண்டு நிறுவனத்தின் பணிப்பாளர் டேவிட் நல்லரத்தினத்துக்கு பஹ்ரைய்ன் நாட்டு அரசாங்கத்தால் கடந்த நாட்களில் மகத்தான வரவேற்பு மற்றும் கௌரவம் வழங்கப்பட்டது.

பஹ்ரைய்ன் நாட்டு பிரதமரின் அழைப்பை ஏற்று Cross Ethnic Community இன் பேராளர்கள் குழு அந்நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டது. இதில் டேவிட் நல்லரத்தினத்தின் பாரியார், Cross Ethnic Community இன் ஆபிரிக்காவுக்கான இணைப்பாளர் ஆகியோரும் பங்கேற்றனர்.
Cross Ethnic Community இன் பிரதான இலட்சியப் பணி இனங்களை இணைப்பது ஆகும். ஸ்கொட்லாந்தில் 15 ஆபிரிக்கர்கள் மற்றும் ஆசியர் குழுக்களை இணைத்து வேலைத் திட்டங்களை முன்னெடுக்கின்றனர். இலங்கையில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களை இணைத்து வேலை திட்டங்களை முன்னெடுக்கின்றனர். காரைதீவை சேர்ந்த மீனவ உறவுகளின் பாவனைக்காக பயன்பாட்டுக்கு உகந்த இரு தோணிகளை வலைகள் அடங்கலாக மூன்று மாதங்களுக்கு முன்னர் Cross Ethnic Community வழங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.

டேவிட் நல்லரத்தினத்தின் தந்தை கலாபூசன் புல்லுமலை நல்லரத்தினம் பாடசாலை அதிபராகவும், , சிற்பாச்சாரியாராகவும் விளங்கியவர். சுவாமி விபுலானந்தரை திருவுருவச் சிலையாக வடித்து 1967 ஆம் ஆண்டு காரைதீவு கிராமத்துக்கு வழங்கியிருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.