புலமையாளர்கள் கௌரவிப்பு விழா
( வி.ரி.சகாதேவராஜா)
இறக்காமம் றோயல் கனிஷ்ட கல்லூரியின் மகத்துவம் 2 எனும் புலமையாளர் கௌரவிப்பு மாண்புறு விழா அதிபர் எம்.ஏ.எம். பஜீர் தலைமையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.
பிரதம அதிதியாக சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானாவும் கௌரவ அதிதியாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.அப்துல் மஜீட், கோட்டக் கல்விப் பணிப்பாளர் யுஎல்.மகுமூட்லெவ்வை, அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரி விரிவுரையாளர் ஏ.நளிம் மற்றும் பள்ளிவாசல்
நம்பிக்கையாளர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழுவினர் கலந்து சிறப்பித்தனர்.
இறக்காமம் கோட்டத்தில் அதிகூடிய 158 புள்ளிகளை பெற்ற ஏஎம். பாத்திமா நுஸைபா உள்ளிட்ட சித்தி பெற்ற 23 மாணவருக்கும் பதக்கமும் கேடயமும் பரிசுகளும் வழங்கப்பட்டன.
பெற்றோர் சார்பில் ஆசிரிய ஆலோசகர் எஸ்எல்ஏ. முனாவ் அதிதிகள் மற்றும் அதிபருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
கருத்துக்களேதுமில்லை