முல்லைத்தீவு மாவட்ட பதில் அரச அதிபராக கனகேஸ்வரன் நியமனம்!

சண்முகம்  தவசீலன்

முல்லைத்தீவு  மாவட்டத்தின் அரசாங்க அதிபராக கடமையாற்றிவந்த க.விமலநாதன் கடந்த 20.05.2023 அன்று அரச சேவையில் இருந்து ஓய்வுபெற்று சென்றநிலையில்  முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றிய கனகசபாபதி கனகேஸ்வரன் முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபராக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு 29.02. 2020 அன்று மாவட்ட அரசாங்க அதிபராகக் கடமையைப் பொறுப்பேற்ற முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் கதிராமத்தம்பி விமலநாதன் தனது 60 ஆவது வயதில் 20.05.2023 அன்று அரச சேவையில் இருந்து  ஓய்வு பெற்று சென்ற நிலையில் 21.05.2023 இல் இருந்து முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபராக கனகசபாபதி கனகேஸ்வரனை நியமிப்பதாக 24.05.2023 அன்று கடிதம் மூலம் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சால்  அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பதில் அரசாங்க அதிபராக கனகசபாபதி கனகேஸ்வரன் கடமைகள் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.