வாழைச்சேனையிலுள்ள மாற்றுத் திறனாளிகள் தொழிற் பயிற்சி நிலையத்துக்கு திருமலை விசேட கல்வி ஆசிரியர்கள் விஜயம்!
ஹூஸ்பர்
சமூக சேவைத் திணைக்களத்தின் கீழ் இயங்கி வரும் வாழைச்சேனையில் உள்ள
மாற்றுத் திறனாளிகளுக்கான தொழிற் பயிற்சி நிலையத்தை அண்மையில் திருகோணமலையில் விசேட கல்வி பிரிவில் கற்பிக்கும் ஆசிரியர்கள் பார்வையிட்டனர்.
எதிர்காலத்தில் மாணவர்களை தொழிற் கல்வியில் விசேட தேவையுடைய மாணவர்களை
இணைப்பது தொடர்பில் பல விடயங்கள் இதன் போது கலந்துரையாடப்பட்டன. இதில்
திருகோணமலையை சேர்ந்த 31 விசேட கல்வி பிரிவு ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் தொழிற் பயிற்சி நிலைய பொறுப்பதிகாரி ஜெ.சுகந்தினி, விசேட கல்வி
பிரிவு உதவி பணிப்பாளர் அகிலன், திருகோணமலை மாவட்ட சமூக சேவைகள்
உத்தியோகத்தர் த.பிரணவன் உட்பட பிரதேச செயலக சமூக சேவை அபிவிருத்தி
உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை