அம்பாறை மாவட்ட ஜம்இய்யத்துல் உலமாவின் புதிய நிர்வாகம் தெரிவு
(ஏயெஸ் மௌலானா)
அம்பாறை மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா சபையின் நடப்பாண்டுக்கான நிர்வாகத்
தெரிவுக் கூட்டம் அதன் தலைவர் அஷ்ஷெய்க் எஸ்.எச். ஆதம்பாவா மதனி
தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய
பள்ளிவாசலில் நடைபெற்றது.
இதன்போது சபையின் புதிய தலைவராக அஷ்ஷெய்க் ஐ.எல்.எம். ஹாஷிம் அஷ்ஹுரி
தெரிவு செய்யப்பட்டார்.
செயலாளராக மீண்டும் அஷ்ஷெய்க் ஏ.எல்.நாசிர்கனி ஹாமி தெரிவானதுடன்
பொருளாளராக அஷ்ஷெய்க் இஸட்.எம்.நதீர், உப தலைவர்களாக அஷ்ஷெய்க்
எம்.ஐ.ஜஹ்பர் பலாஹி, அஷ்ஷெய்க் அன்சார் மௌலானா நழீமி, உப செயலாளராக
அஷ்ஷெய்க் எம்.எல்.பைஷல் காஷிபி ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.
இவர்களுடன் 21 உலமாக்களைக் கொண்ட செயற்குழுவும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் சுமார் 25 வருட காலம் அம்பாறை மாவட்ட
ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவராக பணியாற்றி வந்த அஷ்ஷெய்க் எஸ்.எச்.
ஆதம்பாவா மதனி இதன்போது ஓய்வு பெறுவதாக அறிவித்து பிரியாவிடை பெற்றுக்
கொண்டார்
கருத்துக்களேதுமில்லை