உலக உணவுத்திட்ட அதிகாரிகளை சந்தித்தார் கிழக்கு மாகாண ஆளுநர்!
ஹூஸ்பர்
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் மாகாண பிரதம
செயலாளர் மற்றும் அரச அதிகாரிகள் இணைந்து உலக உணவுத் திட்டத்தின்
இலங்கைக்கான தலைவர் சித்திக் மற்றும் அவருடைய அதிகாரிகளுக்குமிடையே
கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் மேற்கொள்ளப்பட்டது.
கிழக்கு மாகாணத்தில் பொருளாதார பின்னடைவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு
மூன்று வேளை உணவு வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பது குறித்தும், இலங்கையிலேயே கிழக்கு மாகாணத்தில் பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்கள் அதிகமாக காணப்படுகின்றமையல், அவர்களுக்காக புதிய வேலைத்திட்டம் அறிமுகப்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இதன் போது உலக உணவு திட்டத்தின் நிர்வாகிகள் தாங்களால் முடிந்த முழு
ஆதரவை வழங்குவதாக தெரிவித்தனர். இதில் ஆளுநரின் செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை