மருந்துகளின் விலைகளை குறைப்பதற்கு ஏற்பாடுகள்! சுகாதார அமைச்சர் கெஹலிய பணிப்புரை
டொலரின் பெறுமதி குறைவடைந்து வருகின்றமைக்கு சமாந்தரமாக மருந்துகளின் விலைகளையும் மிக விரைவாகக் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
அதற்கமைய டொலரின் பெறுமதியுடன் ஒப்பிடுகையில் மருந்துகளின் விலைகளைக் குறைந்த பட்சம் 15 சதவீதத்தால் குறைக்கப்பட வேண்டுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய பொது மக்களுக்கு தட்டுப்பாடின்றி நியாயமான விலையில் மருந்துகளை வழங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் உரிய திணைக்களங்கள் மற்றும் விலை நிர்ணய குழுக்கள் உள்ளிட்டவற்றின் அதிகாரிகளுடன் துரிதமாகக் கலந்துரையாடி தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும் என்றும் சுகாதார அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்
கருத்துக்களேதுமில்லை