யாழில் வார இறுதியில் ரோந்து நடவடிக்கை! பொலிஸார் அறிவிப்பு
யாழில் வார இறுதியில் தனியார் வகுப்புகள் இடம்பெறும் இடங்களுக்கு அண்மையில் ரோந்து நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு கடமைகளை மேற்கொள்ள பொலிஸார் திட்டமிட்டுள்ளனர்.
மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த நடைமுறையை தொடரவுள்ளதாக யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் உறுதியளித்துள்ளார்.
கடந்த வாரம் முதல் தனியார் வகுப்பு நிலையங்களுக்கு அருகில் பொலிஸாரின் ரோந்து நடவடிக்கை அதிகரிக்கப்பட்டுள்ள அதேநேரம் பாதுகாப்பு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்
கருத்துக்களேதுமில்லை