மிதக்கும் சூரியசக்தி மின்னுற்பத்தி கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஒப்பந்தமும் கைச்சாத்து!
இலங்கையில் முதலாவது மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
நேற்று (புதன்கிழமை) கொரியா தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான நிறுவனம் மற்றும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சுக்கிடையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஆரம்பிக்கப்படவுள்ள மிதக்கும் சூரிய மின் உற்பத்திக் கட்டமைப்புக்கான 5.2 மில்லியன் டொலர் மானியம் கொரியா தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான நிறுவனத்தால் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டங்கள் கொரிய பொறியியல் நிறுவனத்தால் உருவாக்கப்படவுள்ளன. சப்ரகமுவ மாகாணத்திலுள்ள சந்திரிகா வாவி மற்றும் ஊவா மாகாணத்திலுள்ள கிரி இப்பன் வாவி ஆகியவற்றில் இவை உருவாக்கப்படவுள்ளன.
2024 டிசெம்பருக்குள் இந்தத் திட்டத்தை நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை