ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்தமாட்டோம்! சஞ்சீவ எதிரிமான கூறுகிறார்
ஊடக சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த ஒருபோதும் நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித் அவர் –
மக்களுக்கான தகவலறியும் சட்டத்தை இல்லாது செய்யும் வகையில், ஊடக சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த நாம் ஒருபோதும் நடவடிக்கை எடுக்கப் போவதில்லை.
ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்க நாடாளுமன்றுக்கு உள்ளேயும் வெளியேயும் நாம் நிச்சயமாக குரல் கொடுப்போம்.
சட்டமூலம் தொடர்பாக பெரிதாக விவாதிக்கத் தேவையில்லை. ஏனெனில், இது தொடர்பாக நீதிமன்றுக்குச் செல்லலாம்.
நாம் முதலில் இதுதொடர்பாக ஆராய வேண்டும். அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடவும் நாம் தயாராகவே உள்ளோம்.
மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் உள்நாட்டு ஊடகங்களுக்கு மட்டுமன்றி, சர்வதேச ஊடகங்களுக்கும் நாட்டில் பூரண சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது.
டிஜிற்றல் ஊடகத்தின் பலம் சமூகத்தில் அதிகரித்துள்ளது. மக்களும் இவற்றை அவதானித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
பிரபலமான தீர்மானங்கள் இல்லாவிட்டாலும், நாட்டின் நன்மைக்கான சில தீர்மானங்களை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் அரசாங்கம் உள்ளது.
இந்த சட்டம் கொண்டுவரப்படுவதால் ஊடகவியலாளர்கள் சிறைக்குச் செல்வார்கள் என்று அர்த்தம் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான தெரிவித்துள்ளார்
கருத்துக்களேதுமில்லை